யாழ். குடாவில் புதிதாக மூன்று வைத்தியசாலைகள்

யாழ். குடாவில் புதிதாக மூன்று வைத்தியசாலைகள்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2014 | 8:28 pm

மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் யாழ். குடா நாட்டில் குரும்பசிட்டி, தெல்லிப்பளை,கொடிகாமம் ஆகிய இடங்களில் இன்று மூன்று வைத்தியசாலைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

புதிதாகத் திறக்கப்பட்ட இந்த வைத்தியசாலைகளில் இரண்டு கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளும் உள்ளடங்குகின்றன.

தெல்லிப்பளை மற்றும் கொடிகாமம் பிரதேசங்களில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

குரும்பசிட்டி பிரதேசத்தில் சாதாரண ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் வைத்தியசாலையும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்