டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கொலை சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கொலை சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கொலை சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 4:30 pm

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் துஷ்பிரயோக வழக்கில், குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நால்வரின் மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளான ரேவா கேத்ராபால், பிரதீபா ராணி ஆகியோர் தீர்ப்பை உறுதி செய்தனர்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஒரு குற்றவாளி, சிறுவன் என்ற அடிப்படையில் 3 வருட சிறைத் தண்டனை விதித்தது சிறுவர் நீதிமன்றம். ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, ஏனைய 4 குற்றவாளிகளான முகேஷ் (26), அக்‌ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 செப்டம்பர் 13ஆம் திகதி மரண தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது.

இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்