மக்கள் விடுதலை முன்னணி பிரசார நாடகக் குழு மீது தாக்குதல்

மக்கள் விடுதலை முன்னணி பிரசார நாடகக் குழு மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 8:52 pm

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார வீதி நாடகக் குழு மீது பாணந்துறை நகரில் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாணந்துறை பஸ் தரிப்பிடத்தில் இந்த வீதி நாடகக் குழுவினர் இன்று பிற்பகல் தேர்தல் பிரசார நாடகமொன்றை அரங்கேற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்தே நாடகக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் வீதி நாடகக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரிடம் இருந்தும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்