பதிவாளர் நாயக திணைக்களத்தின் அலுவலகங்களில் சிசிடிவி கெமராக்கள்; மோசடிகள் அம்பலமாகுமா?

பதிவாளர் நாயக திணைக்களத்தின் அலுவலகங்களில் சிசிடிவி கெமராக்கள்; மோசடிகள் அம்பலமாகுமா?

பதிவாளர் நாயக திணைக்களத்தின் அலுவலகங்களில் சிசிடிவி கெமராக்கள்; மோசடிகள் அம்பலமாகுமா?

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2014 | 8:00 pm

நில விற்பனையின் போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டு பதிவாளர் நாயக திணைக்களத்தின் அலுவலகங்களில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்த அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, ஆய்வுத் தளங்களில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் E.M.குணசேகர தெரிவித்தார்.

நில விற்பனை நடவடிக்கைகளைப் பார்வையிடும் நோக்கில் அதிகளவானவர்கள் உள்ளிடுவதைத் தவிர்க்க, பார்வையாளர் கட்டணத்தை 5 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நில விற்பனை நடவடிக்கைகளின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான மோசடிகள் குறித்து கிடைக்கப்பெற்ற 56 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளைத் தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்