தோமஸின் பந்து வீச்சில் சுருண்டது றோயல்

தோமஸின் பந்து வீச்சில் சுருண்டது றோயல்

தோமஸின் பந்து வீச்சில் சுருண்டது றோயல்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 10:00 pm

உலகின் பழமை வாய்ந்த பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான கொழும்பு றோயல் மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 135 ஆவது நீலவர்ணங்களின் போர் இன்று ஆரம்பமானது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி அணி 158  ஓட்டஙகளுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித தோமஸ் கல்லூரி அணித்தலைவர் மதுஷான் ரவிச்சந்ரகுமார் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் அணியின் முதல் 8 விக்கெட்டுகளும் 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

எனினும், டிரான் தனபால மற்றும் ஹரிஸ் சமரசேகர ஜோடி ஒன்பதாம் விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.

டிரான் தனபால மற்றும் டிரான் தனபால ஆகியோர் தலா 45 ஓட்டங்களையும், ஹரிஸ் சமரசேகர 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

றோயல் கல்லூரி அணி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் சஹான் விஜேசிங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்