காணாமற்போன மலேசிய விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பறந்துள்ளது!

காணாமற்போன மலேசிய விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பறந்துள்ளது!

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2014 | 4:06 pm

காணாமற்போன மலேசிய விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை விமானம் பயணித்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான என்ஜினின் தன்னிச்சையான தகவல் தரவேற்றம் மற்றும் அன்றாட  தகவல்  பரிமாற்றத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

போயிங் விமானமான அதில் பொருத்தப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் என்ஜினிலிருந்து விமானம் பறப்பது தொடர்பான தகவல்கள்  தன்னிச்சையாகத்  தரைத் தளத்திற்கு வந்து சேரும். அதை ஆய்வு செய்த பின்னரே அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமற்போன MH370 மலேசிய விமானத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடைசியாகக் கிடைக்கப்பெற்ற தகவல், “All right, good night” என்பது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து வியட்நாமின் எல்லைப் பரப்பை அண்மித்தபோது விமானிகளில் ஒருவர் இந்தத் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னரே குறித்த விமானம் ராடார் திரையிலிருந்து திடீரென மாயமாய்ப் போயுள்ளது.

இதைத் தொடர்ந்து, விமானம் குறித்த பலவிதத் தகவல்களும் வெளிவந்தவண்ணமுள்ளன. என்றாலும், விமானம் எங்குள்ளது என்பது குறித்து தற்போது வரை எவ்விதத் தகவல்களும் இல்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்