இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 25; தமிழக அரசுக்கும் அறிவிப்பு

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 25; தமிழக அரசுக்கும் அறிவிப்பு

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 25; தமிழக அரசுக்கும் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 8:18 pm

ஒத்திவைக்கப்பட்ட இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு உத்தேசித்துள்ளது.

இதற்கான யோசனை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக தமிழக அரசிற்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இதுதொடர்பில் தமிழக அரசின் பதிலை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2013 ஆம் ஆண்டில் இந்திய கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களுடன் அவர்களின் 9 படகுகளும் தமிழகத்தில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஸ கூறினார்.

அத்துடன் இந்த வருடத்திற்குள் இந்திய கடற்பரப்பினுள் ஆறு படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 30 பேர் தமிழகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்