அரசியற்கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு

அரசியற்கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு

அரசியற்கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 1:32 pm

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அலுவலகங்களை, வேட்பாளர்களின் தராதரம் பாராது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் அவ்வாறான அலுவலகங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

கட்சி அலுவலகமொன்றை ஸ்தாபிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஏற்கனவே அரசியற்கட்சிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, வெற்று இடமொன்றில் வேட்பாளர்களின் நிழற்படங்களை காட்சிப்படுத்தி, கட்சி அலுவலகங்களை ஸ்தாபிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் பிரதிநிதிகளை நியமித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து, விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்