ரஜினிக்கு வில்லனாகும் சுதீப்

ரஜினிக்கு வில்லனாகும் சுதீப்

ரஜினிக்கு வில்லனாகும் சுதீப்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 10:42 am

‘கோச்சடையான்’ படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதனை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் நடிக்காத பட்சத்தில் பொலிவுட் நாயகியாக யாராவது இறக்குமதி செய்யும் முடிவில் உள்ளனர் படக்குழுவினர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தினை ஒளிபதிவு செய்த ரத்னவேலுதான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்