மஹபொல புலமைப் பரிசிலின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

மஹபொல புலமைப் பரிசிலின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

மஹபொல புலமைப் பரிசிலின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 7:11 am

உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வழங்கப்படும் மஹபொல புலமைப் பரிசிலின் எண்ணிக்கையை அடுத்த வருடம் 1,500 முதல் 2000 வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவிக்கின்றது.

அதன் பிரகாரம் அடுத்த வருடம் முதல் மஹபொல புலமைப் பரிசில் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 12,800 இல் இருந்து 13,300 வரை அதிகரிக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொள்ளும் மாணவர்களில் சுமார் 50 வீதமானவர்கள் தற்போது மஹபொல புலமைப் பரிசிலை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் காலப்பகுதியில், வருடாந்தம் 10 தவணைகளுக்கு, மஹபொல புலமைப் பரிசிலை பெறும் மாணவர்களுக்கு, நிதியத்தின் ஊடாக பணம் வழங்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்