மலாக்கா நீரிணை வழியே மாயமான விமானம் – மலேசிய இராணுவம்

மலாக்கா நீரிணை வழியே மாயமான விமானம் – மலேசிய இராணுவம்

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 5:57 pm

மாயமான மலேசிய விமானம் மலாக்கா நீரிணை அருகே சென்றதாக மலேசிய இராணுவம் தெரிவித்துள்ளது.

227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் மலேசியாவில் இருந்து கடந்த 8ஆம் திகதி விமானம் சீனாவிற்குப் பயணித்தது.

malacca2

அந்த விமானம் சீனா வரும் வழியில் காணாமற்போனது.

இந்நிலையில், இந்த விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டு கோட்டா பாரு நகரில் இருந்து வழியை மாற்றியுள்ளது.

malacca3

திரும்பி வரும் வழியில் மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா நீரிணை அருகே சென்றமை ராடாரில் பதிவாகியுள்ளதாக மலேசிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

விமானம் எதற்காக வழக்கமாக செல்லும் வழியில் இருந்து மாறிச் சென்றது, சீனாவுக்கு சென்று ஏன் திரும்பியது என்பது தெரியவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்