மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்; விசாரணைகள் ஆரம்பம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்; விசாரணைகள் ஆரம்பம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 12:12 pm

ஹட்டன் கொட்டியாகல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பில் தமக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொட்டியாகல பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியே நான்கு பேரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்வில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்