நம்மாழ்வாரின் வாழ்க்கையை படமாக்கும் சமுத்திரக்கனி; முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார்

நம்மாழ்வாரின் வாழ்க்கையை படமாக்கும் சமுத்திரக்கனி; முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார்

நம்மாழ்வாரின் வாழ்க்கையை படமாக்கும் சமுத்திரக்கனி; முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 6:00 pm

தமிழ் சினிமாவில் நல்ல படைப்புக்களை தரும் ஒருசில  இயக்குனர்களில் ஒருவராக தனது முத்திரையை பதித்தவர் சமுத்திரக்கனி.

இவர் இயக்கிய நிமிர்ந்து நில் படம் பல பிரச்சினைகளுக்கு பிறகு மார்ச் 8 வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்திய இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், தம் வாழ்நாள் முழுவதும் இயற்கைக்காக பெரும் பாடுபட்டவர்.

இவரால் ஈர்க்கப்பட்ட சமுத்திரக்கனி இனிவரும் இளைய தலைமுறைகளுக்கு பயன்படும் வகையில் இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுவதற்காக ஒரு படம் எடுக்கவுள்ளார்.

இதற்காக சமுத்திரக்கனி நம்மாழ்வாரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை பற்றி சேகரிக்க தொடங்கியுள்ளார்.

இந்த படத்திற்கு சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரியவருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்