நகைகளை திருடிய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சிறை

நகைகளை திருடிய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சிறை

நகைகளை திருடிய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சிறை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 2:13 pm

ஐம்பத்து ஐயாயிரம் திர்ஹாம் பெறுமதியான நகைகளை திருடியதாகக் கூறப்படும் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு, ஐக்கிய அரபு இராஜ்ஜிய நீதிமன்றத்தினால் 06 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர், இந்தப் பணிப்பெண் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வசிக்கும் இந்திய வர்த்தகரொருவரின் வீட்டில் இந்தப் பெண் பணியாற்றியுள்ளார்.

குறித்த பணிப்பெண் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முற்பட்டபோது, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்