தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 2:04 pm

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 45 தமிழக  மீனவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீனவர்களின் 12 படகுகளும் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்தில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள மீனவர்களில் 15 பேர் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 04 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்நதனர்.

வடபகுதி கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதான ஏனைய 30 மீனவர்களும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி 08 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக  கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்