காணாமல் போன விமானத்தில் பயணித்தவர்கள் சிலரின் கைத்தொலைபேசிகள் இயங்குகின்றன

காணாமல் போன விமானத்தில் பயணித்தவர்கள் சிலரின் கைத்தொலைபேசிகள் இயங்குகின்றன

காணாமல் போன விமானத்தில் பயணித்தவர்கள் சிலரின் கைத்தொலைபேசிகள் இயங்குகின்றன

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 12:36 pm

காணாமல் போயுள்ள மலேஷிய விமானம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானத்தில் பயணித்த சில பயணிகளின் கைத்தொலைபேசிகள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த சில பயணிகளின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்பினை ஏற்படுத்தும் போது அவற்றின் ‘ரிங்கிங் டோன்களை’ கேட்கக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தொலைபேசி அழைப்புக்களுக்கு எவரும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை சீனாவில் இயங்கும் பிரபல சமூக இணையத்தளமான QQவில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் சிலரின் ஸ்மாட் போன்கள் இயங்கு நிலையிலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்த விமானம் காணாமல் போனது.

40ற்கும் மேற்பட்ட கப்பல்கள், 36ற்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் தேடுதல் நடிவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

மலேஷியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்