ஐதராபாத் சிறையில் விஜய்!

ஐதராபாத் சிறையில் விஜய்!

ஐதராபாத் சிறையில் விஜய்!

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 11:38 am

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் படப்படிப்பு தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த திரைப்பட்த்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்போது இளைய தளபதி விஜய் சிறைச்சாலைக்குள் தள்ளப்படும் காட்சிகளை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ஐதராபாத்தில் ஒளிப்பதிவு செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய செட் அமைத்து இந்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதில் சிறைச்சாலைக்குள் ஊடுருவும் வில்லனின் அடியாட்களுடன் விஜய் மோதும் ஒரு அதிரடி சண்டை காட்சியும் படமாகிறதாம்.

இந்த திரைப்படத்தில் இரு வேடங்களில்  இந்த படத்தில் நடிக்கும் விஜய் இரண்டு வேடங்களிலும் நிறைய வித்தியாசம் காட்டுகிறாராம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த துப்பாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

அதையடுத்து, விஜய் இயக்கத்தில் தலைவா, நேசன் இயக்கத்தில் ஜில்லா என இரண்டு படங்களில் நடித்த விஜய்க்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதனால் இப்போது தீரன் படம் மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்திருப்பதால் விஜய் அதிக உற்சாகத்தோடு இருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்