எமது கல்வி முறைமையில் குறைபாடு உள்ளது – ஜனாதிபதி

எமது கல்வி முறைமையில் குறைபாடு உள்ளது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 8:22 pm

தற்போதைய கல்வி முறைமையில் ஏதோ ஒரு இடத்தில் குறைபாடு காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலி ரிச்சர்ட் பத்திரண மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மஹிந்தோதய ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டதின் கீழ் தென் மாகாணத்தின் சில பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் ஜனாதிபதியினால் இன்று திறந்துவைக்கப்பட்டன .

இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது;

“உலகத்தை வெற்றிகொள்ளக் கூடிய பிள்ளைகளை உருவாக்க வேண்டும். இதற்கான சிறந்த உதாரணமே அண்மையில் மிகிந்தலை பிரதேச மாணவன் ஒருவன் புதிய கண்டுபிடிப்பொன்றில் ஈடுபட்டு உலகலாவிய ரீதியில் முதலாவதாகத் தெரிவாகி தங்கப்பதக்கத்தை வென்றமை. ஆனால், அந்த மாணவனுக்கு கலைத்துறையில் கல்வி கற்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. சிறந்த அறிவு அவனிடம் இருந்த போதிலும் பொறியியற்துறைக்குள் பிரவேசிக்க முடியவில்லை. இன்றுள்ள கல்வி முறைமையே அதற்கான காரணம். ஆனால், அந்த மாணவனுக்கு புலமைப்பரிசில் ஒன்று கிடைக்கப்பெற்று கொரியாவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே எமது கல்வி முறைமையில் ஏதோ ஒரு இடத்தில் குறைபாடு உள்ளது.”

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்