உக்ரைன் நெருக்கடியை உளவு பார்க்கும் நேட்டோ  விமானங்கள்

உக்ரைன் நெருக்கடியை உளவு பார்க்கும் நேட்டோ விமானங்கள்

உக்ரைன் நெருக்கடியை உளவு பார்க்கும் நேட்டோ விமானங்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 9:51 am

உக்ரைன் நெருக்கடியை அவதானிப்பதற்கு நேட்டோவின் உளவு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

போலாந்து மற்றும் ரோமானிய உளவு விமானங்களே இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோ அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும், உக்ரைனின் எல்லைப் பகுதியில் மாத்திரமே தமது உளவு விமானங்கள் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் நேட்டோ அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் க்ரைமியா பகுதியை தொடர்ந்தும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க க்ரைமிய பாராளுமன்றம் நடத்திய வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டிவருகின்றன.

ரஷ்ய படையினாலும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களினாலும்   க்ரைமிய இராணுவ வைத்தியசாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்