ஈரப்பதன் 14 வீதத்திற்கு குறைவாக காணப்படும் நெல்லையே அரசாங்கம் கொள்வனவு செய்யும்

ஈரப்பதன் 14 வீதத்திற்கு குறைவாக காணப்படும் நெல்லையே அரசாங்கம் கொள்வனவு செய்யும்

ஈரப்பதன் 14 வீதத்திற்கு குறைவாக காணப்படும் நெல்லையே அரசாங்கம் கொள்வனவு செய்யும்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 7:16 am

நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், பெரும்போகத்தில் இதுவரையில் 2,000 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிக்கின்றது.

அம்பாறை, கிளிநொச்சி, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் நெல் கொள்வனவு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் K.B.ஜயசிங்க கூறினார்.

நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக அரச களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படும் பட்சத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இம்முறை பெரும்போகத்தின் போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசி 32 ரூபாவுக்கும், ஒருகிலோகிராம் சம்பா அரிசி 35 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

அத்துடன் ஈரப்பதன் 14 வீதத்திற்கும் குறைவாக காணப்படும் நெல்லை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்