இலங்கையின் உள்ளக நடவடிக்கைகள் மதிப்பிழந்துள்ளன –  நியூசிலாந்தின் பசுமைக் கட்சி

இலங்கையின் உள்ளக நடவடிக்கைகள் மதிப்பிழந்துள்ளன – நியூசிலாந்தின் பசுமைக் கட்சி

இலங்கையின் உள்ளக நடவடிக்கைகள் மதிப்பிழந்துள்ளன – நியூசிலாந்தின் பசுமைக் கட்சி

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 7:30 pm

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணைக்கு நியூசிலாந்து ஆதரவு தெரிவிக்க வேண்டுமென நியூசிலாந்தின் மூன்றாவது மிகப்பெரிய அரசியற்கட்சியான பசுமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் காணப்படும் நிலைமையினை கருத்திற்கொண்டு, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அழுத்தம் பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பம் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் மூலம் நியூசிலாந்துக்கு கிடைப்பதாக நியூசிலாந்து பசுமைக் கட்சியின் மனித உரிமைகளுக்கான ஊடகப் பேச்சாளர் ஜன் லோகி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நியூசிலாந்தின் பிரதிநிதிகள் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளக நடவடிக்கைகள் மதிப்பிழந்துள்ளதாகவும் ஜன் லோகி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியூசிலாந்து கருத்து வெளியிடாமை குறித்து வெட்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்