இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் – பைசர் முஸ்தபா

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் – பைசர் முஸ்தபா

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் – பைசர் முஸ்தபா

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 8:00 am

ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்படுகின்றமைக்கு அனைவரும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமென பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பிரதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

[quote]ஜெனிவாவில் இன்று பிரேரணையொன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த பிரேரணை நிறைவேற்றப்படுகின்றமைக்கு நாம் அனைவரும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். சில அமைச்சர்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளவதற்காக இனம் தொடர்பில் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றனர். எனினும், எமது அரசாங்கத்திற்கு ஜெனிவாவில் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அமெரிக்காவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரணைக்கு எதிரான இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்