இரத்தினக்கல் வர்த்தகர் கொலைச் சம்பவம்; பிரதான சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

இரத்தினக்கல் வர்த்தகர் கொலைச் சம்பவம்; பிரதான சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

இரத்தினக்கல் வர்த்தகர் கொலைச் சம்பவம்; பிரதான சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 2:09 pm

இரத்தினபுரி, மஹவெலவத்தை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

மலல்கம பகுதியைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகரின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகரின் கொலை தொடர்பில் கைதான 02 சந்தேகநபர்களுடன், அவர்கள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்றபோது மறைந்திருந்த மற்றுமொரு சந்தேகநபரால் பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவருடன் இருந்த மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்