இந்திய மீனவர்கள் இணக்கப்பாட்டை மீறுகின்றனர்; குற்றம் சுமத்துகிறார் ராஜித

இந்திய மீனவர்கள் இணக்கப்பாட்டை மீறுகின்றனர்; குற்றம் சுமத்துகிறார் ராஜித

இந்திய மீனவர்கள் இணக்கப்பாட்டை மீறுகின்றனர்; குற்றம் சுமத்துகிறார் ராஜித

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 6:57 am

சென்னையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு, இந்திய மீனவர்களால் தொடர்ச்சியாக மீறப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

இதுவரையில் இவ்வாறான 08 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

இணக்கப்பாட்டினை மீறும் வகையில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 172 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 25 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நாளை மறுதினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில், இரண்டு நாடுகளினதும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் 17 பேரும், 08 அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடல் எல்லையை மீறி ஒருமாத காலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததாக அமைச்சர் கூறினார்.

ஆயினும், அதனை மீறும் வகையில், தென்னிந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதனை இந்திய மீன்பிடி சங்கங்களும், திணைக்களங்களும் ஏற்றுக்கொள்வதாக ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின், தமது பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக இந்திய மீனவர்கள் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை மீனவர்களை விடுவிப்பதற்கு முன்னர் எட்ட வேண்டியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்