அரசாங்கத்தில் இருப்பது சலூன் கதவு; ஹக்கீமின் கருத்துக்கு முஸம்மில் பதில்

அரசாங்கத்தில் இருப்பது சலூன் கதவு; ஹக்கீமின் கருத்துக்கு முஸம்மில் பதில்

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 9:19 pm

அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பதிலளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது;

“தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இருப்பது சலூன் கதவு என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் . இந்தக் கதவினைத் திறந்துகொண்டு ஹக்கீமின் கட்சியில் இருந்து 5 பேர் வர இருந்தனர். அவர்கள் வந்திருந்தால் ஹக்கீம் மற்றும் ஹசன் அலி மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸில் எஞ்சியிருப்பார்கள். ஏனைய அனைவரும் இங்கு வந்து மூன்றில் இரண்டை ஏற்படுத்தியிருப்பார்கள். அந்த அச்சம் காரணமாகவே ஹக்கீம் இங்கு வந்தார். அவ்வாறு இல்லாது , விருப்பத்திலோ மூன்றில் இரண்டை உருவாக்கவோ அவர் இங்கு வரவில்லை,” என்றார் மொஹமட் முஸம்மில்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்