பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை

பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை

பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 7:07 pm

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களிடம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரன் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் முழு ஆதரவை வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக செயற்படுவதாக பிரித்தானியப் பிரதமரின் ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் சில நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையில் மனித உரிமை விடயங்கள் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவ முடியுமென நம்புவதாக பிரித்தானிய பிரதமரின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்