வைத்தியரை அச்சுறுத்திய மாகாண சபை உறுப்பினர் விளக்கமறியலில்

வைத்தியரை அச்சுறுத்திய மாகாண சபை உறுப்பினர் விளக்கமறியலில்

வைத்தியரை அச்சுறுத்திய மாகாண சபை உறுப்பினர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 5:30 pm

வெலிமடை ஆதார வைத்தியசாலையின் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெலிமடை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ரொஹான் ஸ்ரீ மாபாவிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மாகாண சபையின் உறுப்பினர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைதான மாகாண சபை உறுப்பினர் நேற்று வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவரை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினர்,   நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகியதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்