மாலைதீவில் 4 தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆறு மாத கால சிறை

மாலைதீவில் 4 தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆறு மாத கால சிறை

மாலைதீவில் 4 தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆறு மாத கால சிறை

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 1:12 pm

மாலைதீவில் நான்கு தேர்தல் ஆணையாளர்களுக்கும் அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க தவறிய குற்றச்சாட்டில் அவர்கள் மூன்று வருடங்களுக்கு பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக மாலைதீவுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பாராளுமன்ற தேர்தல்களுக்கான தாயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தாயாராகிவருகின்ற நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற சுதந்திரமானதும் நீதியமானதுமான தேர்தலை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தமை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஃபவாட் தௌபீக் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிப்படையாக விமர்ச்சித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்