மன்னாரில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுமி உயிரிழப்பு

மன்னாரில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுமி உயிரிழப்பு

மன்னாரில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 11:19 am

மன்னார் பன்னவட்டுவான் பகுதியில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த சேலை  இறுகியதில் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகிலுள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக சேலை கழுத்தில் இறுகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்விகற்றுவந்த மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்