பேஸ்புக் முறைப்பாடுகள் அதிகரிப்பு; பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்

பேஸ்புக் முறைப்பாடுகள் அதிகரிப்பு; பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்

பேஸ்புக் முறைப்பாடுகள் அதிகரிப்பு; பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 12:19 pm

இந்த வருடம் சுமார் 170 பேஸ்புக் கணக்குகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கணணி அவசர பிரதிபலிப்புக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் முறைக்கேடுகள் தொடர்பில் இதுவரை 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.

இதில் 80 வீதமான முறைப்பாடுகள் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை கணணி அவசர பிரதிபளிப்புக்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்