பிரான்ஸ் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பிரான்ஸ் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 2:04 pm

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியையும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு வட மாகாண ஆளுனருடனான சந்திப்பு ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் வட மாகாணத்தில் போருக்குப்பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தூதுவருக்கு விளக்கியுள்ளார்.

இதன்பின்னர் காலை 10.30 அளவில் வடமாகாண சபையின் அவை தலைவருடனான சந்திப்பில் பிரான்ஸ் தூதுவர் ஈடுபட்டு இருந்தார்.

இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில அபகரிப்பு மற்றும் இராணுவத் தலையீடு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சிவில் நிர்வாகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த்தும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் பிரான்ஸ் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்