தேசிய ஔடத கொள்கை தொடர்பான இறுதி சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய ஔடத கொள்கை தொடர்பான இறுதி சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 7:58 pm

தேசிய ஔடத கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் தொடர்பான இறுதி சட்டமூலம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் சேனக்க பிபிலேவினால் தயாரிக்கப்பட்ட இந்த ஔடத கொள்கை, தேசிய ஒளடத கொள்கையாக அறிவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தேசிய ஒளடதக் கொள்கை தொடர்பான சட்டமூலத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார்.

சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், தேசிய ஔடத மானியங்கள் அதிகார சபை என்ற பெயரில் சுயாதீன நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

மருந்தகங்களை பதிவுசெய்தல், அவற்றின் நடவடிக்கைகளை சிறந்த தரத்துடன் முன்னெடுப்பதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய ஔடத கொள்கையினை முன்னெடுப்பதன் மூலம், நாட்டின் சுகாதாரத் துறையில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் குற்றங்களை தடுக்க முடியுமெனவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்