துப்பாக்கியுடன் கடமைக்குச் செல்லுமாறு பொலிஸாருக்கு  ஆலோசனை

துப்பாக்கியுடன் கடமைக்குச் செல்லுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை

துப்பாக்கியுடன் கடமைக்குச் செல்லுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 5:34 pm

கடமை நிமித்தம் செல்லும்போது, ரிவோல்வர் மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கிகளை எடுத்துச்செல்லுமாறு பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடமைகளுக்காகச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு நபர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாவதனை தடுக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்கு உள்ளான 27 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்