தமிழ் அஜித் குமாரவிடம் தொடர்ந்தும் விசாரணை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தமிழ் அஜித் குமாரவிடம் தொடர்ந்தும் விசாரணை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 8:16 pm

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான நாரதோட ஹேவகே தமிழ் அஜித் குமார எனப்படும் தெவுந்தர சமில் என்பவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாங்கொக்கில் இருந்து வருகைதந்தபோது நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்