சங்கக்கராவின் இடத்திற்கு திரிமான்ன தகுதியானவர்; மெத்தியூஸ் புகழாரம்

சங்கக்கராவின் இடத்திற்கு திரிமான்ன தகுதியானவர்; மெத்தியூஸ் புகழாரம்

சங்கக்கராவின் இடத்திற்கு திரிமான்ன தகுதியானவர்; மெத்தியூஸ் புகழாரம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 10:01 am

இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான குமார் சங்கக்காரவுக்கு பின்னர், அவரது இடத்தை நிரப்புவதற்கு லஹிரு திரிமான்ன தகுதியானவர்,’’ என, இலங்கை அணியின் தலைவர் மெத்தியூஸ் தெரிவித்தார்.

பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதி பேட்டியில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்ட, இலங்கை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதில், திரிமான்ன சதம் அடித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து இலங்கை அணியின் தலைவர் மெத்தியூஸ் தெரிவித்த கருத்து:-

அனுபவ வீரர்களான சங்கக்கார, ஜயவர்தனவின் ஓய்வுக்கு பின், இவர்களது இடத்தை முறையே லஹிரு திரிமான்ன, சண்டிமால் நிரப்புவார்கள். திரிமான்னவை பொறுத்தவரை ‘துடுப்பாட்ட வரிசையில்’ எந்த இடத்தில் விளையாடினாலும், ஒட்டங்கள் சேர்க்கும் திறன் பெற்றவர். ஆசிய கிண்ண போட்டியில் அசத்திய இவர், சங்கக்கராவின் இடத்திற்கு தகுதியானவர் என நிரூபித்தார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில், தில்ஷான் காயம் அடைந்தார். இதனால், ஆசிய கிண்ண போட்டியில் ஆரம்ப வீரர் வாய்ப்பு திரிமான்னவுக்கு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய இவர், இறுதி போட்டியில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதை தவிர லசித் மலிங்க இறுதி போட்டியில் எதிர் அணி அதிக ஓட்டங்களை பெறுவதை தடுத்தார், இலங்கை அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயற்பட்டு வருவது மகிழ்ச்சி தருகின்றது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடியதால்தான் கிண்ணத்தை வென்றறோம் என அர்த்தமில்லை. இது எமது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு கருத்து தெரிவித்தார் மெத்தியூஸ்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்