கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 5:26 pm

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது பணிகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு பிரதேச சபையின் தவிசாளர் உட்பட நிர்வாகம் இடையூறு விளைவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சபையின் செயலாளர் இரத்தினம் கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

சபை உத்தியோகத்தர்களின் இன்றைய போராட்டம் தொடர்பில் தமக்கு கடிதம் மூலம் இன்று முற்பகல் அறியக் கிடைத்ததாகவும், இருந்தபோதிலும் அவர்களது குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் பிரதேச சபையின் தொழிற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றதாகவும் சபையின் தவிசாளர் கூறினார்.

தங்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின், நிர்வாக ரீதியில் தமக்கு அறிவித்து உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பிரதேச சபைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உத்தியோகத்தர்கள் நடந்துக் கொள்ளக்கூடாது எனவும் சபை தவிசாளர் வை.குகராசா மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்