”உலக சனத்தொகையும் பொருளாதாரத்தில் ஆசியாவின் பங்களிப்பும்” பாங்கொக்கில் செயலமர்வு

”உலக சனத்தொகையும் பொருளாதாரத்தில் ஆசியாவின் பங்களிப்பும்” பாங்கொக்கில் செயலமர்வு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 10:28 pm

ஆசிய பாராளுமன்ற முன்னணியால் ”உலக சனத்தொகையும் பொருளாதாரத்தில் ஆசியாவின் பங்களிப்பும்” என்ற தொனிப்பொருளில் செயலமர்வொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்றது.

”உலக சனத்தொகையும் பொருளாதாரத்தில் ஆசியாவின் பங்களிப்பும்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீறங்கா கலந்துக்கொண்டார்.

ஆசிய பாராளுமன்ற முன்னணி, இலங்கை சார்பாக கலந்துக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவை அழைத்திருந்தது.

தாய்லாந்து பாங்கொக்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பாக கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா தலைமையில் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்