இந்திய பிரஜைகள் 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்திய பிரஜைகள் 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்திய பிரஜைகள் 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 1:41 pm

போலி வீசா ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்கு வருகைதந்த இந்தியப் பிரஜைகள் ஆறு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள தொழிற்சாலையொன்றில் பயணியாற்றுவதற்காக போலி வீசா ஆவணனங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் சந்தேகநபர்களான ஆறு இந்தியப் பிரஜைகளையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

சந்தேகநபர்கள் 22 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

தடுத்து வைக்கும் உத்தரவின்பேரில் சந்தேகநபர்களான இந்தியப் பிரஜைகளிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்