நுவரெலியாவில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

நுவரெலியாவில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

நுவரெலியாவில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 12:33 pm

நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

bandarawela_2

வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளவர்களில் இரண்டு சிறுவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

காயங்களுடன் அனுமதிக்க்கட்டுள்ளவர்களில் எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

bandarawela3

கொழும்பிலிருந்து வெளிமடை நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி, இன்று காலை 5.30 அளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்