காணாமல்போன மலேஷிய விமானம் மீளவும் திரும்பியிருக்கக் கூடும் என தகவல்

காணாமல்போன மலேஷிய விமானம் மீளவும் திரும்பியிருக்கக் கூடும் என தகவல்

காணாமல்போன மலேஷிய விமானம் மீளவும் திரும்பியிருக்கக் கூடும் என தகவல்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 1:23 pm

239 பேருடன் காணாமல் போனதாக கூறப்படும் மலேசிய விமானம், மீளவும் மலேசியாவுக்கு இருக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பீஜிங்கில் தரையிரங்காமல் மீளவும் கோலாலம்பூரை வந்தடைவதற்கான  சாத்தியக்கூறுகள் காணப்பட்டதாக மலேசியாவின்  இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான பதிவுகள் ரேடார் கருவியில் பதிவாகியுள்ளதாகவும் , குறித்த இராணுவ அதிகாரியை மேற்கொள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தேடுதல் பணிகளில் சுமார் 40 கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் விமானத்தில் பயணிப்பதற்காக ஐவர் பதிவு செய்துள்ள போதிலும் , அவர்கள் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் போலியான கடவுச்சீட்டுகள் மூலம் இருவர் விமானத்தில் பயணித்துள்ளமை  கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதிவுகளை சிசிடீவி கமரா மூலம் பரிசோதித்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதில் பயணித்தவர்களின் மூன்றில் இரண்டு வீதமானோர் சீனப்பிரஜைகள் என்பதுடன் இந்தியதாவைச் சேர்ந்த ஐவரும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்