கம்பஹாவில் துப்பாக்கிப் பிரயோகம்; இளைஞன் பலி

கம்பஹாவில் துப்பாக்கிப் பிரயோகம்; இளைஞன் பலி

கம்பஹாவில் துப்பாக்கிப் பிரயோகம்; இளைஞன் பலி

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 9:21 am

கம்பஹாவில் வல்பொல பகுதியில் அடையாளம் காணப்படாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான்.

கார் ஒன்றில் வந்த சிலர், நேற்றிரவு 08 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தின் போது காயமடைந்த இளைஞனும் அவனது தாயாரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  , இளைஞன் உயிரிழந்துள்ளான்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள்  சந்தைப் பகுதியில் கொள்ளையிட வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்