ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான தலைவர் ஈரான் விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான தலைவர் ஈரான் விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான தலைவர் ஈரான் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 4:25 pm

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான தலைவர் கெதரின் அஷ்டன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு  ஈரானுக்கு  சென்றுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பதவியேற்றதன் பின்னர் அவர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளும்  முதல் தடவை இது  என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த வாரமளவில்  இடம்பெறவுள்ள மேற்குல நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

கத்தரின் , ஈரான் ஜனாதிபதி ரௌஹானி ,சபாநாயகர் அலி லர்ஜானி  மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் சரீப் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்

சர்ச்சைக்குரிய அணுத்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளையாட்டுச் செய்தி (09-03-2014) 11.55

2014 ஆம் ஆண்டுக்கான  உலக உள்ளரங்க மெய்வல்லுனர் போட்டிகளில்  பிரித்தானியா இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளது.

பிரித்தானியாவின் ரிச்சர்ட் கில்டி 60 மீற்றர் தூரத்தை 6 தசம் நான்கு ஒன்பது செக்கன்களில் கடந்து முதலிடத்தை தட்டிக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்