ஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் காலமானார்

ஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் காலமானார்

ஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 7:05 pm

ஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் பாஹிம் தனது 57 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

ஆப்கானின் உப ஜனாதிபதியின்  மரணத்தையடுத்து 3 நாட்களை துக்க தினமாக அனுஷ்டிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும்  ஆப்கான் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மார்ஷல் பாஹிம் ஆப்கானின் தஜிக் என்ற சிறுபான்மையின தலைவராகவும், இராணுவத்தில் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு பதவியில் இருந்து அகற்றப்பட்ட தலிபான்களுக்கு ஆதரவான ஒருவரான மார்ஷல் பாஹிம், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

சுகவீனம் காரணமாக மார்ஷல் பாகீம் காலமாகியுள்ளதாக ஆப்கான் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்