ராஜிவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மேலும் தாமதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மேலும் தாமதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மேலும் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2014 | 12:09 pm

ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்,  நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இதற்கு, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு சரியானது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசின் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணையை மார்ச் 26ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நீதிமன்ற விசாரணை நிறைடையும் வரை முருகன், சாந்தன்,பேரரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுலை இடமபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்