ரஷ்யாவுடன் இணையத் தயார்: கிரைமியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

ரஷ்யாவுடன் இணையத் தயார்: கிரைமியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

ரஷ்யாவுடன் இணையத் தயார்: கிரைமியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

06 Mar, 2014 | 5:20 pm

தென் உக்ரைன் பிராந்தியமான கிரைமியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரஷ்யாவுடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

மார்ச் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுசன கருத்துக்கணிப்பின் பின்னர் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என அந்நாட்டுப் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கியூவிலுள்ள அமைச்சர்கள் சிலர் கிரைமியா, ரஷ்யாவுடன் இணைவது அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்த உக்ரேனிய ஜனாதிபதியின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதிகளவு ரஷ்யர்கள் வாழும் உக்ரேனியப் பகுதியான கிரைமியா, மோதல்களின் நகரமானது.

இதனையடுத்து அப்பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டன.

உக்ரைன் மண்ணில் ரஷ்யப் படைகளின் ஆதிக்கத்தை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்து புருசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கலந்துரையாடி வரும் நிலையில், கிரைமியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்