சீனிப் பாவனையை அரைவாசியாக குறைக்க வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

சீனிப் பாவனையை அரைவாசியாக குறைக்க வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

சீனிப் பாவனையை அரைவாசியாக குறைக்க வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2014 | 9:42 am

நாளாந்த சீனிப் பாவனையை அரைவாசியாக குறைக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மொத்தக் கலோரியில் 10 வீதத்திற்கும் குறைவாகவே சீனியை உட்கொள்ள வேண்டும் என ஸ்தாபனத்தின் புதிய வழிகாட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனி இயற்கையாகவுள்ள தேன், தேன்பாகு, பழச்சாறுகள் உள்ளிட்ட உணவுகள் பொருட்களை உட்கொள்வதையும் மட்டுப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உலகளாவிய ரீதியில் மக்களிடையே உடற்பருமன் அதிகரித்துவரும் நிலையில், 10 வீத சீனி உள்கொள்வதும் மிக அதிகமானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிவுறுத்தலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிடுவதற்கு 10 ஆண்டுகள் சென்றுள்ளமை கவலைக்குரியது என இது தொடர்பாக பிரித்தானியாவில் பிரசாரங்களை செய்வோர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்