பின் லாடனின் மருமகன் மீதான வழக்கு விசாரணை நியூயோர்க்கில் ஆரம்பம்

பின் லாடனின் மருமகன் மீதான வழக்கு விசாரணை நியூயோர்க்கில் ஆரம்பம்

பின் லாடனின் மருமகன் மீதான வழக்கு விசாரணை நியூயோர்க்கில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2014 | 10:10 am

அல் கைய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடனின் மருமகன் தொடர்பாக வழக்கு விசாரணை நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அபு காய்த் வெளியிட்டதாக அமெரிக்காவின் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அல் கைய்தா அமைப்பின் பேச்சாளராக செயற்பட்ட சுலைமான் அபு கைய்த் தொடர்பான வழக்கு விசாரணையின் ஆரம்ப வாதங்களின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்

அத்துடன் அமெரிக்கர்களை கொலை செய்த சதி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை 47 வயதான அபு கைய்த் நிராகரித்துள்ளார்.

குவைத்தைச் சேர்ந்த அபு கைய்த் துருக்கியில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்