உலகில் மிகக்குறைந்த செலவுடன் வாழக்கூடிய நகரம் மும்பை

உலகில் மிகக்குறைந்த செலவுடன் வாழக்கூடிய நகரம் மும்பை

உலகில் மிகக்குறைந்த செலவுடன் வாழக்கூடிய நகரம் மும்பை

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2014 | 2:54 pm

உலகில் மிகக்குறைந்த செலவுடன் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்த பட்டியலில் டெல்லிக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

பொருளியல் நுண்ணறிவு அலகு 2014 (Economist Intelligence Unit 2014)  சார்பில் ‘உலகளாவிய வாழ்க்கைச் செலவினம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் ஆசிய நகரங்கள் குறிப்பாக இந்தியத் துணைக்கண்ட நகரங்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கு ஏற்றவையாக உள்ளதாக அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்கள் மிகக் குறைந்த செலவினத்தையும், மிக அதிக செலவினத்தையும் கொண்டிருப்பதற்குக் காரணம் அங்கு நிலவும் வளமை மற்றும் ஏழ்மையில் நிலவும் அதிக ஏற்றத் தாழ்வுதான் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களில் கூலியும் விலையும் குறைவு; அரசாங்கத்தின் மானியமும் செலவின விகிதத்தைப் பெருமளவு குறைக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி, வாழ்க்கைச் செலவினம் குறைந்த பெருநகரங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி, சிரியாவின் டமாஸ்கஸ், நேபாளத்தின் காத்மண்டுர ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வாழ்க்கைச் செலவினம் குறித்த ஆய்வை, பொருளியல் நுண்ணறிவு அலகு ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்கிறது. உணவு, உடை, இருப்பிடத் தேவைகள், குடிக்கும் பொருள்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, தனிமனித தேவைகளுக்கான பொருட்கள், தனியார் பாடசாலைகள், பயன்பாட்டு கட்டணங்கள், பொழுதுபோக்குக் கட்டணங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

நியுயோர்க் நகரம் இந்த ஒப்பீட்டுக்கான அடிப்படை நகரமாகக் கொள்ளப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்