வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணம்: அமைச்சர் பந்துலவின் மகனுக்கு சரீரப் பிணை

வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணம்: அமைச்சர் பந்துலவின் மகனுக்கு சரீரப் பிணை

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 7:09 pm

வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அமைச்சர் பந்துல குணவர்தனவின் புதல்வரான சதுர குணவர்த்தன இரண்டு இலட்சம் ரூபா  சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை மேலதிக நீதவான் முன்னிலையில்  இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

தங்கல்ல -மாத்தறை வீதியில் பிரவுன்ஸ் ஹில் சந்திக்கருகில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒருவர் மீது ஜீப் ரக வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிசிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்ததாவது;

[quote]வாகன விபத்தில் ஒருவரைக் காயப்படுத்தியமை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அவரைக் கைது செய்தோம். ஆனால், காயங்களுக்குள்ளானவர் நேற்று உயிரிழந்தமையால் இன்று இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். கவனக் குறைவாக  வாகனத்தைச் செலுத்தியதனால் ஒருவர் உயிரிழந்தமையை மையப்படுத்தி அவர் நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டதுடன் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமை தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்