யுக்ரேனிலுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

யுக்ரேனிலுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

யுக்ரேனிலுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 9:34 am

யுக்ரேனில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

யுக்ரேனிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் மொஸ்கோவிலுள்ள இலங்கைக்கான தூதவராலயம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

யுக்ரேன் க்ரைமியா அரச மருத்து பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த 20 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், அவர்கள் மொஸ்கோவிலுள்ள இலங்கைக்கான தூவராலயத்துடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

மொஸ்கோவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கை மாணவர்களின் நலன் தொடர்பில், பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை ஈடுபட்டதாக அமைச்சு கூறுகின்றது.

அத்துடன் பல்கலைக்கழகங்களின் விடுதிகளிலுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகிகள் உறுதியளித்துள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை மாணவர்களை நாட்டிற்கு மீள அழைப்பது மற்றும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி கொள்வதற்கோ அவசியமில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்